/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
18வது ஆண்டு ஹரிநாம சங்கீர்த்தன ஆராதனை உற்சவம்
/
18வது ஆண்டு ஹரிநாம சங்கீர்த்தன ஆராதனை உற்சவம்
அக் 15, 2025

புதுடில்லி அருணா அசப் சாலையில் உள்ள ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் இரண்டு நாள் (அக் 11,- -12) ஸ்ரீ ராதா கல்யாணம் உற்சவம், பஜனைகள் சம்பிரதாயப்படி, வெகு விமரிசையாக நடந்தது.
அக்-11, காலை தோடயமங்கலம், குரு கீர்த்தனையுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, அஷ்டபதி, நாம சங்கீர்த்தனம், பஞ்சபதி, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் மற்றும் மாலை திவ்ய நாம சங்கீர்த்தன பஜனை நடைபெற்றன.
அக்-12 காலை உஞ்சவிருத்தி, மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஸ்ரீ ராதா கல்யாண திருமாங்கல்ய தாரணம், அதைத் தொடர்ந்து, வசந்த கேளிக்கை, பவளிம்பு, ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவ நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இதை பால கோகுலம் குழுவினர் நடத்தி வைத்தனர். ஏற்பாடுகளை புதுடில்லி பாலகோகுலம் பஜன் குழுவினர் செய்திருந்தனர். இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
