/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சரோஜினி நகர் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவிலில் 37வது மஹாருத்ரம்
/
சரோஜினி நகர் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவிலில் 37வது மஹாருத்ரம்
சரோஜினி நகர் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவிலில் 37வது மஹாருத்ரம்
சரோஜினி நகர் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவிலில் 37வது மஹாருத்ரம்
அக் 14, 2025

புதுடில்லி: சரோஜினி நகர் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில் அக்டோபர் 10 முதல் 12 வரை, 37வது மகாருத்ரம் மிகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ ருத்ரம் ஈஸ்வரனை போற்றும் மிக உயர்நிலை மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரம் தத்தமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்க வல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றது.
ஏகாதச ருத்ரம் :
11 முறை ருத்ரம் சொல்வது, 'ஏகாதச ருத்ரம்' எனப்படும். இதை 11 நபர்கள் ஒரு முறை சொல்வர். 121 முறை (11 நபர்கள் 11 முறை) சொல்வது, 'லகு ருத்ரம். லகு ருத்ரத்தை 11 முறை கூறினால், மஹா ருத்ரம். இந்த மஹாருத்ரத்தை 11 முறை பாராயணம் செய்வது, 'அதிருத்ரம்' ஆகும்.
இந்த மகா யக்ஞம் லோக கல்யாணத்திற்காகவும், அனைத்து மனித குலத்தின் நன்மைக்காகவும், உலகளாவிய அமைதி மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்காகவும் நடத்தப்படுகிறது .
மூன்று நாட்கள் மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்நிகழ்வில், ஐம்பதிற்கும் மேற்பட்ட ரித்விக்குகள் மற்றும் வேத விற்பன்னர்கள், குரு ஸ்ரீ சந்திரசேகரன் தலைமையில், தினமும் பங்கேற்று வேத பாராயணம் செய்தனர்.
9 -அக் மாலை, உதக சாந்தி ஜபத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. 10 - அக், குரு வந்தனம், கிரஹ ப்ரீதி கடம் ஸ்தாபனம், மஹன்யாசம், ஸ்ரீ ருத்ர த்ரீஸதி, லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றன.
11 அக் - மஹன்யாஸம், ஸ்ரீ ருத்ர த்ரீஸதி, ஏகாதச ருத்ர பாராயணம் மற்றும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றன. 12 அக் நிறைவு நாளான்று, மஹன்யாஸம், ஸ்ரீ ருத்ர த்ரீஸதி, ஏகாதச ருத்ர பாராயணம், ஸ்ரீ சீனிவாசன் சாஸ்திரிகள் தலைமையில், மகாருத்ர ஹோமம், , வசுதரா ஹோமம், பூர்ணாஹூதி கற்பக விநாயகர், ஓம்காரேஸ்வர், ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் நவகிரஹ சன்னதிகளில் மகா அபிஷேகம், அதைத் தொடர்ந்து பிரகார உற்சவம் நடைபெற்றன.
மூன்று நாட்களும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மகா ருத்ரம் சிறந்த முறையில் நடந்தேற உதவிய அனைவருக்கும் ஆலய கமிட்டி சார்பில், நன்றியை தெரிவித்தனர்.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
