/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
/
விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
அக் 13, 2025

புதுதில்லி: விகாஸ்புரி சி பிளாக்கில் உள்ள ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் விகாஸ்புரி ஹஸ்தலைச் சார்ந்த ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சத்சபா (SVSS) தனது 33வது ஆண்டு விழாவை மிகு விமரிசையாக கொண்டாடியது.
காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, தன்வந்திரி ஹோமம் விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. ஆன்மிக அன்பர்கள் பலர் இதில் கலந்து கொண்டு பாராயணம் செய்தனர்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம்
விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களை உச்சரிக்கும் பக்தி முறையாகும். இது மன அமைதி, மகிழ்ச்சி மற்றும் வேண்டுதல்கள் நிறைவேற பல நன்மைகளைத் தரும் என்று நம்பப்படுகிறது. இது பிறந்த நாள், திருமண நாள் போன்ற சுப நாட்களில் அல்லது மனதில் உள்ள காரியங்கள் வெற்றி பெறவும் செய்யப்படுகிறது. இந்தச் செயல்முறை இறைவனுக்கு நம்மை முழுமையாக அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது.
மந்திர புஷ்பத்திற்கு பிறகு, தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்