/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
/
சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
மே 12, 2024

புதுதில்லி சரோஜினி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் திருக்கோயிலில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு, ஆவஹந்தி ஹோமம், மஹன்யாஸ பாராயண ஜபம் மற்றும் ஏகாதச ருத்ர ஜபம் மிகவும் விமரிசையாக நடந்தது.
காலை 8.00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவாசனம் மற்றும் கலச ஸ்தாபனம் நடைபெற்றது.
8.30 மணிக்கு மஹன்யாஸ பாராயண ஜபம், இதைத் தொடர்ந்து ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத ஸ்ரீ கற்பக விநாயகர், ஶ்ரீ ஆதி சங்கரர் மற்றும் ஓங்காரேஸ்வருக்கு அபிஷேகம், நாமார்ச்சனை, உபசார பூஜைகள் மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. ரித்விக்குகள் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர்.
ஸ்ரீ கற்பக விநாயகர் சன்னதி சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
-நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்