/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் பாத பூஜை
/
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் பாத பூஜை

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சி மகா பெரியவரின் 134 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு, புதுதில்லி துவாரகாவில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் மந்திரில், குருஜி பிரம்மஸ்ரீ ஜி.கே.சீதாராமன் தலைமையில்
பாத பூஜை நடத்தப்பட்டது. பாத பூஜை, குருவின் தாமரை பாதங்களில் பக்தி மற்றும் நன்றியுணர்வுடன் மரியாதை செலுத்துவதாகும். அதைத் தொடர்ந்து, அவரின் சீடர்கள் ஸ்ரீ ருத்ர ஜபம் மற்றும் ருத்ர சமகம் பாராயணம் செய்தனர். ஆரம்ப பூஜைக்குப் பிறகு, ஸ்ரீ மகா பெரியவரைப் பற்றியும், வேதங்கள் மற்றும் பாட சாலையின் முக்கியத்துவம் பற்றியும் குருஜி விளக்கினார். பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்