
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளிரை சமாளிக்க இலவச போர்வை
டில்லி மயூர் விகார் பேஸ்-3 ல் உள்ள செந்தமிழ்ப்பேரவை சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 28.12.2024 காலை 10.30 மணி முதல் மயூர் விகார் பேஸ்-3 ல் உள்ள ரோட்டோரத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் கடும் குளிரைப் போக்கும் வண்ணம் தரமான போர்வை ( Blankets ) 200 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது .
தலைவர் மாரி தலைமையிலும் செயலாளர் சரவணன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் விஜயகுமார், ( CFO, OGL ONE LIMITED, Ultimate Parent Company of ONGC) சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். பொருளாளர் க.செல்வக்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்
