
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்கள் நொய்டா செக்டார் 62ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், பல்வேறு ஸ்லோகங்கள் பாராயணம் செய்வது மட்டுமல்லாமல், மற்றும் ஸ்ரீ ராமரைப் புகழ்ந்து பாடல்கள் பாடுவதைக் காண முடிந்தது. மேலும், இதையொட்டி சிறப்பு 'ஸ்வர்கவாசல்' உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் ஸ்ரீரங்கம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான கோவில்களில் செய்யப்படுவது போலவே நடந்தது. சிறப்பு அபிஷேகம் முடிந்ததும் ஸ்ரீராம பரிவாரம் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார் . மாலையில் ஸ்ரீ ஜே ராமகிருஷ்ணன் பாகவதர் மற்றும் ஸ்ரீ விஸ்வநாதன், விஎஸ்எஸ் பஜனை மண்டலி குழுவினர் திவ்யநாமம் மற்றும் நாமசங்கீர்த்தனம் வழங்கினார்.
கமிட்டி உறுப்பினர்களான பாலாஜி, ராஜு, ஸ்ரீதர் மற்றும் தொண்டர்கள், குறிப்பாக அர்ஜுனுக்கு கோவில் நிர்வாகம் நன்றி தெரிவித்தது. அனைத்து பூஜைகளையும் கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா செய்தனர். மஹா தீபாராதனையுடன் அன்றைய தின நிகழ்வு நிறைவு பெற்று, அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
