தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ 36 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

36 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

36 ஜோடிகளுக்கு இலவச திருமணம்


பிப் 23, 2026

Follow on GoogleFavourite on Google

பிப் 23, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

36 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
டில்லி மயூர்விகார் ராம் மந்திர் வளாகத்தில் ஜனகல்யாண் நிகழ்வு நடைபெற்றது. சுமார் 36 தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த மணமகன் மணமகள் பொருளாதாரத்தின் கீழ் மட்டத்தில் உள்ளவர்களை டில்லி மற்றும் அருகிருக்கும் கிராமங்களில் இருந்து தேர்ந்தெடுத்து அவர்களின் பின்புலத்தை விசாரித்து முடிவெடுக்கிறார்கள்.
திருமணத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் சமிதி மேற்கொண்டு செய்கிறது. மணமகன் ஷெர்வாணி அணிந்து குதிரையில் வர மணமகள் லெகங்காவில் தயாராகிறாள். ஜெயமாலை மாற்றி 36 ஜோடிகளும் தனித்தனி மண்டபத்திற்கு அழைத்துச் செல்ப்படுகின்றனர் அந்தந்த தம்பதிகளின் உறவினர்கள் சுற்றி அமர பண்டிட் மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதில் 36 பண்டிட்கள் கலந்துகொள்கிறார்கள். தம்பதியருக்கு சீர்வரிசையாக கட்டில் மெத்தை கம்பளி பேன் தையல் மெஷின் மற்றும் சமையலறை பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நற்பணியில் பல சமிதிகள் பல சமூக சேவகர்கள் கலந்து கொண்டு செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.அனைவரும் கல்யாண விருந்து உண்டு மகிழ்ந்தனர்.
டில்லியில் இருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us