பிப் 23, 2026

'ராதா கல்யாண மஹோத்ஸவம்', அவரது நாமங்கள் 'கிருஷ்ணா, கோவிந்தா, விட்டலா' என்று கோஷமிடுவதன் மூலம், இரண்டு நாட்கள் நிகழ்ச்சி ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில், செக்டார் 62, நொய்டாவில் நடைபெற்றது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் நொய்டாவின் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது.
விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், பந்தல் கால் முகூர்த்தம் ஆகியவற்றுடன் இந்த தெய்வீக நாமசங்கீர்த்தனம் தோடயமங்கலத்துடன், ராதா கல்யாணம் பிப்ரவரி 21ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியது. நாராயண குரு, பத்ராசல ராமதாஸ், ஸ்ரீ புரந்தரதாசர், ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்,
ஸ்ரீ கோபால கிருஷ்ணா, புனித தியாகராஜர் ஆகியோரின் கிருதிகள் பாடலுடன் இரண்டு நாட்கள் நிகழ்ச்சி, தெய்வங்களுக்கும் பூஜை, தேவதா தியானம், தீப பிரதக்ஷணம் / திவ்யநாமம், டோலோத்ஸவம் (சயன உற்சவம்) விநாயகர் முதல் கிருஷ்ண சைதன்யர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் நடந்தன. இந்த மஹோத்ஸவம் விஎஸ்எஸ் பஜன் மண்டலி, நொய்டா நிகழ்த்தியது.
ராதா கல்யாண மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, விஎஸ்எஸ் நொய்டாவின் குழு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது. முதல் நாளன்று மாலையில் டெல்லி, வானம்பாடி குழுவினர் கோலாட்டம் நிகழ்ச்சியை வெகு சிறப்பாக வழங்கியது. பிப்ரவரி 22-ம் தேதி, ராதா கல்யாணம் - தட்சிண சம்பிரதாயத்தின் படி, நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து ஆஞ்சநேய உற்சவம், மங்களம், மகா தீபாராதனை, மகா பிரசாதம், வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. தென்னிந்தியாவின் நாமசங்கீர்த்தனம் தலைநகர் 'ஆலங்குடியில்' நடத்துவது போல் இரண்டு நாட்கள் பஜனைகளும் நொய்டா கோவிலில் நடத்தப்பட்டன.
அனைத்து பூஜைகளும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தானத்தின் ஆஸ்தான வாத்தியார் ஸ்ரீராமின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கோயில் வாத்தியார் உதவியோடு நடைபெற்றது. கோயில் நிர்வாகத்தினர் நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் : ராஜேந்திரன், வெங்கட்ராமன், ரவி சர்மா, பாலாஜி, ராமசேஷன், ராஜு ஐயர், வெங்கடேஷ், ஸப்தரிஷி, ஸ்ரீதர் ஐயர், திருமதி ஜி ஜானகி, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம மண்டலி (மகளிர் பிரிவு), பராமரிப்பு ஊழியர்கள் அனைவருக்கும், இரண்டு நாட்கள் விழாவை சிறப்பாக நடத்தி கொடுப்பதற்கு, நன்றி தெரிவித்தனர்.
பக்தர்கள், இந்த தெய்வீக கல்யாண உற்சவத்தில் பங்கேற்க, அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க இது ஒரு சிறந்த தெய்வீக வாய்ப்பாக நிரூபிக்கப்பட்டது. நொய்டா மற்றும் டெல்லி, இந்திராபுரம், காஜியாபாத் ஆகிய அண்டை பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இந்த இரண்டு நாள் மஹோத்ஸவத்தில் கலந்து கொண்டனர்.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
