தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ நொய்டா கோவிலில் குரு பெயர்ச்சி

நொய்டா கோவிலில் குரு பெயர்ச்சி

நொய்டா கோவிலில் குரு பெயர்ச்சி


மே 26, 2026

Follow on GoogleFavourite on Google

மே 26, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா கோவிலில் குரு பெயர்ச்சி
'குரு' மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுவதை ஒட்டி, நொய்டா, செக்டார் 22ல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில், மே 26ம் தேதி காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. ஸ்ரீ விநாயகர் பூஜையுடன் தொடங்கி, 'பரிகார' சங்கல்பம் நடந்தது. இதைத் தொடர்ந்து குரு மற்றும் அனைத்து நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மகா ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்து, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி, நவக்கிரகங்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அனைத்து பூஜைகளும் ஸ்ரீ ஜெகதீஷ் சிவாச்சாரியார் தலைமையில் ,ஸ்ரீ விஸ்வாவின் உதவியுடன் நடந்தன. இதே போல், நொய்டா செக்டார் 62ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில், நவக்கிரக குருவிற்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், 45 டிகிரியை தாண்டிய நிலையில், கோயிலுக்குச் சென்று பூஜைகளில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர.
நொய்டாவில் இருந்த நமது செய்தியாளர் வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us