/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா செக்டர் 62 கோவிலில் குருபெயர்ச்சி
/
நொய்டா செக்டர் 62 கோவிலில் குருபெயர்ச்சி
மே 02, 2024

நொய்டா செக்டார் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில், குருபெயர்ச்சியை முன்னிட்டு, நவக்கிரக ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டது. கலச ஸ்தாபனம், ஜபம், நவக்கிரக ஹோமம் ஆகியவற்றுடன் பூஜை தொடங்கியது. மேலும், இதையொட்டி, குருவுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையுடன் நிறைவடைந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஹோமம் மற்றும் அபிஷேகம் VPS ஆஸ்தான வாத்தியார் சங்கர் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐந்து பண்டிதர்கள் குழுவின் உதவியுடன் செய்யப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் இந்த ஆலயத்தை, வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நிர்வகித்து வருகிறது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்