/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டாவில் ஹோமியோபதி இலவச மருத்துவ முகாம்
/
நொய்டாவில் ஹோமியோபதி இலவச மருத்துவ முகாம்
ஏப் 21, 2025

உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு இலவச ஹோமியோபதி மருத்துவ முகாமை, நொய்டா ஹோமியோபதி டாக்டர்கள் சொசைட்டி, வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், அவ்வை தமிழ் சங்கம் மற்றும் டாக்டர் வில்மர் ஸ்வாபே இந்தியா ஆகியோர் இணைந்து நொய்டா செக்டர் 62 ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில் நடத்தினர்.
வேதிக் பிரச்சர் சன்ஸ்தானின் தலைவர் ரவி பி சர்மா வரவேற்றார். பன்னிரண்டு மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கியது. டாக்டர் வில்மரின் படத்திற்கு முகாமிற்கு வந்திருந்த அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவ்வை தமிழ் சங்கம் சார்பில் டாக்டர் வலவன் நன்றியுரை கூறினார். நொய்டாவின் மூத்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் சரோஜா சுந்தரராஜனும் கலந்து கொண்டார். இலவச மருந்துகளைத் தவிர, பரிசுகளை டாக்டர் வில்மர் ஸ்வாப் இந்தியா வழங்கியது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்