செப் 21, 2026

குருகுலம் அறக்கட்டளைக்கு பாராட்டு
20.09.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று டில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கில் குருகுலம் அறக்கட்டளையின் ஆண்டு விழா நடைபெற்றது. தென்னிந்திய இசை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்து வளர்ப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்து வரும் குருகுலம் அறக்கட்டளையின் சார்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் குரு ஸ்ரீதர் மற்றும் அவரது தாயார் நிவேதா ஆகியோரை தில்லித் தமிழ்ச் சங்கம் பாராட்டி கௌரவித்தது.
டில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் டாக்டர் ஜி. சிவபாலமுருகன் மற்றும் துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வராஜ் மகேந்திரன் ஆகியோர், செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்து ஸ்ரீதர் மற்றும் நிவேதா ஆகியோருக்கு பாராட்டு வழங்கினர்.
தென்னிந்திய கலாச்சாரம், பாரம்பரியக் கலைகள் மற்றும் இசை மரபைப் பாதுகாத்து வளர்ப்பதில் குருகுலம் அறக்கட்டளை தொடர்ந்து மதிப்புமிக்க சேவையாற்றி வருகிறது. இவ்வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை எதிர்காலத் தலைமுறைகளிடம் கொண்டு சேர்க்கும் அறக்கட்டளையின் அர்ப்பணிப்பான முயற்சிகளை டில்லித் தமிழ்ச் சங்கம் பாராட்டியது.
- முனைவர் ஜி. சிவபாலமுருகன், தலைவர்.+91 98111 18827
