/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் லகுன்யாச ஏகாதச ருத்ர பாராயணம்

செப் 08, 2025

புதுடில்லி: விகாஸ்புரி சி பிளாக்கில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் செப்-7 காலை லகுன்யாச ஏகாதச ருத்ர ஐபம் நடைபெற்றது. வேத விற்பன்னர்கள், ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று ருத்ர பாராயணம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, விகாஸ்புரி பிராத்தனா குழுவினர் செய்து இருந்தனர்.
தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், அர்ச்சனை, ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி, ஸ்ரீ ருத்ரநாம த்ரிஸதீ நடைபெற்றன. இதையடுத்து, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம் மற்றும் ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பிரதி மாதம் முதல் வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை தோறும், ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் விகாஸ்புரி பிராத்தனா குழுவினர் ஏற்பாட்டில் இக்கோவிலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன், புதுடில்லி.