தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா கோவில்களில் மஹா சிவராத்திரி

நொய்டா கோவில்களில் மஹா சிவராத்திரி

நொய்டா கோவில்களில் மஹா சிவராத்திரி


பிப் 16, 2026

Follow on GoogleFavourite on Google

பிப் 16, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா கோவில்களில் மஹா சிவராத்திரி
வேத மந்திரம் முழங்க, இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா பிப்ரவரி 14-ஆம் தேதி சனிக்கிழமை மாலை பிரதோஷத்தை முன்னிட்டு, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், செக்டர் 62, நொய்டாவில் 108 சங்காபிஷேகத்துடன் மஹா சிவராத்திரியின் முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கின. பிப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை மஹா சிவராத்திரி நாளில், காலையில் ம்ருத்யுஞ்ஜய ஹோமத்துடன் தொடங்கியது. மாலை 6 மணிக்கு நான்கு கால பூஜைகள் தொடங்கி, 16 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
அனைத்து பூஜைகளும் மற்றும் ஹோமங்களும் இந்தியாவில் உள்ள பிரபலமான சிவாலயங்களில் நடப்பது போலவே நடந்தது. இவை அனைத்தும் வி பி எஸ் ஆஸ்தான பண்டிதர்கள் ஸ்ரீ சங்கர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீராம் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கோயில் வாத்தியார்கள் ஸ்ரீ மணிகண்டன் சர்மா மற்றும் ஸ்ரீ ரௌனக் மெஹதா, ஆகியோரின் திறமையான உதவியுடன் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மண்டலியின் மகளிர் பிரிவினர் மற்றும் பிற பக்தர்கள் பல்வேறு ஸ்லோகங்களை வாசித்தனர்.
மேலும், சிவனைப் போற்றிப் பாடல்களையும் பாடினர். ஏராளமான பக்தர்கள் நொய்டா, டெல்லி, கிரேட்டர் நொய்டா, இந்திராபுரம், வைஷாலி மற்றும் காசியாபாத் ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். கோயில் நிர்வாகம், அனைத்து நன்கொடையாளர்கள், ஸ்பான்சர்கள், தன்னார்வலர்கள், கமிட்டி உறுப்பினர்கள்: ஏ பாலாஜி, எஸ் வெங்கடேஷ், கோபால், ராஜேந்திரன், வெங்கட்ராமன், ஸ்வாமிநாதன், திருமதி ஜி ஜானகி, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மண்டலியின் (மகளிர் பிரிவினர்), மற்றும் பராமரிப்பு ஊழியர்ககளின் அர்ப்பணிப்புடன் சேவை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தது.
இதே போன்ற பூஜைகள் நொய்டாவில் செக்டார் 22ல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலிலும் நடைபெற்றது. இந்த கோவிலில் அனைத்து பூஜைகள் ஸ்ரீ ஜெகதீஷ் சிவாச்சாரியாரால் செய்யப்பட்டது.
வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், ஒத்த எண்ணம் கொண்ட பக்தர்களால் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த நாற்பது வருடங்களாக சேவை செய்து கொண்டிருக்கிறது. இந்த சன்ஸ்தான் நொய்டாவில் இருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில், செக்டர் 22, மற்றும் ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், செக்டர் 62, இரண்டு கோவில்களையும் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us