பிப் 15, 2026

தில்லி லோதி ரோட் இந்திய ஹாபிடேட் மையம் ஸ்டெயின் கலை அரங்கில் ஆச்சார்யா ஜெயலெட்சுமி ஈஸ்வர் அவரது மாணவர்கள் இணைந்து வழங்கிய கலவையும் கலந்தும் ( mix and match) என்ற தலைப்பில் வழங்கிய பரத நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பாக இந்திய நெசவாளர்களை கெளரவிக்கும் விதமாக மையப் பொருளை எடுத்துக்கொண்டு நடனகோர்வையை அமைத்திருந்தார்கள்.
பரந்து விரிந்த பாரத தேசத்தில் ஒவ்வொரு மாநிலமும் தனக்குரிய சிறப்புடன் ஆடைகளை பட்டிலும் பருத்தியிலும் நெசவு செய்கின்றனர். காஞ்சிபுரம், ஆரணி, தர்மாவரம், நமக்கு தெரிந்த வகைகள். அஸ்ஸாம் பட்டு, பெங்கால் பட்டு, காசி பட்டு, மைசூர் பட்டு, காஷ்மீர் பட்டு நாம் பார்த்த ரகங்கள். இது தவிர பருத்தியிலும் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு வகையை உற்பத்தி செய்கின்றன.அவை பயன்பாட்டில் விதவிதமான துணிகள் , சேலைகள் என்று கொண்டாடப்படுகின்றன.
இப்படி சுமார் 19 மாநிலங்களை எடுத்துக்கொண்டு அங்கு தயாராகும் சேலைகள் 88 யும் வகைப்படுத்தி அதற்குரிய பின்னணியை பின்னால் திரையில் காண்பித்து அந்தந்த மாநில நடனங்களை இணைத்து மிக அருமையாக தொகுத்து வழங்கினார்கள். குருவுடன் இணைந்து மொத்தம் 14 கலைஞர்கள் பங்கேற்றனர். முக்கிய விருந்தினர்கள் வாழ்த்து கூறி கெளரவித்தலுடன் நிகழ்வு நிறைவுற்றது.
- தில்லியில் இருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி
