தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி கோலாகலம்

சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி கோலாகலம்

சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி கோலாகலம்


பிப் 13, 2026

Follow on GoogleFavourite on Google

பிப் 13, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி கோலாகலம்
கிழக்கு தில்லி மயூர் விகார் காருண்ய மகா கணபதி கோவிலில் வெள்ளி அன்று மிருத்ஞ்ய ஜபத்துடன் ஆரம்பமானது. சங்கல்பம் விநாயகர் பூஜை தொடர்ந்து கூடியிருந்த வித்வத்துக்கள் ஜபத்தை தொடர்ந்தனர். நாளையதினம் பிரதோஷம் அடுத்து வரும் ஞாயிறன்று மிருத்ஞ்ய ஹோமமும் நாலு கால பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற உள்ளன.
மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை எதற்காக உச்சரிக்க வேண்டும்? அதனால் என்ன பயன்?
சிவ பெருமானை துதிக்கும் மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக கருதப்படும் மகா மிருத்யுஞ்சய மந்திரம் ரிஷிகளாலும், முனிவர்களாலும், சித்தர்களாலும் பயன்படுத்தப்பட்ட மந்திரமாகும். இந்த மந்திரத்தின் ஆற்றல், அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோய் இல்லாமல் வாழ்வதே மிகப் பெரிய சொத்து என வேதந்திரமும் புராணங்களும் சொல்கின்றன. அத்தனை மிகப் பெரிய சொத்தை அருளக் கூடியது மகா மிருத்யுஞ்ஜய மந்திரமாகும். இந்த மந்திரத்தை ஒரு முறை சொன்னால் கூட அது கவசம் போல் இருந்து நம்மை காக்கும் சக்தி படைத்தது ஆகும்.
சிவனுக்குரிய மிக முக்கியமான மந்திரம் மகா மிருத்யுஞ்சய மந்திரம் ஆகும். மார்கண்டேயரை போல் சாகா வரம் அருளும் படி சிவனிடம் வேண்டுவதற்கு சமமான மந்திரம் இதுவாகும். காயத்ரி மந்திரத்திற்கு அடுத்த படியாக மிக பழமையான மந்திரமாக கருதப்படும் இந்த மந்திரம் நான்கு வேதங்களில் ரிக் மற்றும் யஜூர் ஆகிய இரண்டு வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மகா மிருத்யுஞ்சய மந்திரம் :'ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்'
பொருள் :
இயற்கையாகவே நறுமணத்தை கொண்டவரும், அடியவர்களுக்கு கருணையை அருள்பவருமான முக்கண் கொண்ட எங்கள் பெருமானே உங்களை பூஜித்து வழிபடுகிறோம். பழங்கள் எப்படி மரத்தில் இருந்து விடுபடுகின்றனவோ அதே போல் மரணத்தின் பிடியில் இருந்து என்னை விடுவித்து, ஆன்மீக வழியில் இருந்து மனம் தடுமாறாமல் நான் வாழ அருள் செய்ய வேண்டுகிறேன்.
மகா மிருத்யுஞ்சய மந்திரம் என்பது சிவ பெருமானுக்கு உரிய மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகும். இதை திரியம்பகம் மந்திரம் என்றும் சொல்வார்கள். ரிஷி மார்கண்டேயர் இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்ததாலேயே சிவனின் அருளை பெற்றார். சிவ பெருமானும் எம தர்மராஜனை காலால் எட்டி உதைத்து, மார்கண்டேயரை காத்து, சிரஞ்சீவி வரமளித்தார். எட்டு சிரஞ்சீவிகளில் அவரும் ஒருவராக திகழ்கிறார்.
சிவ பெருமானுக்கு மிருத்யுஞ்சயன் என்ற திருநாமமும் உண்டு. இவரை மரணத்தில் இருந்து விடுவிப்பவராக உள்ளார். நீண்ட வாழ்வளிக்கும் மிக சக்தி வாய்ந்த மந்திரமாக மகாமிருத்யுஞ்சய மந்திரம் உள்ளது. வாழ்வை மீட்டுத் தரும் மந்திரமாகவும் இந்த மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும். தீய சக்திகளின் பிடியில் இருந்து வெளியே வரவும், மரண பயம் இன்றி வாழும், கிரகங்களின் தீய பாதிப்புக்களில் இருந்து மீளவும் துணை நிற்கிறது.
இந்த சிவராத்திரி நாளில் அவரவர் இல்லத்தில் இருந்து முடிந்தமட்டும் இந்த ஜபத்தை பாராயணம் செய்து பலன் பெறலாம்.
- டில்லியில் இருந்து மீனா வெங்கி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us