/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா முருகன் கோவிலில் மஹா ஸ்கந்த சஷ்டி விழா
/
நொய்டா முருகன் கோவிலில் மஹா ஸ்கந்த சஷ்டி விழா
அக் 19, 2025

வேத மந்திரம் முழங்க, நொய்டா முருகன் கோவிலில் மஹா ஸ்கந்த சஷ்டி விழா, அக்., 22ல் கணபதி ஹோமம், ஸ்ரீ ருத்ரம் முழக்கத்துடன் துவங்குகிறது. மாலையில் ஸ்ரீ சுப்ரமண்ய சஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். இரண்டாம் நாளிலும் தொடர்ந்து ருத்ரம் கோஷமிடுதல், மாலையில் வித்வான் வெங்கடேஸ்வரன் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி நடைபெறும். 25ம் தேதி ருத்ரம் ஓதுதல், ஸ்ரீ சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலையில் திருப்புகழ் அன்பர்கள் திருப்புகழ் இசை வழிபாடு ஆகியவை நடக்க உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை, 26 ஆம் தேதி கோயில் நிர்வாகத்தினர் காலையில் 'சத்ரு சம்ஹார ஹோமம்' ஏற்பாடு செய்து, அதைத் தொடர்ந்து ஸ்ரீ கார்த்திகேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மகா தீபாராதனையுடன் அன்றைய நிகழ்ச்சி நிறைவடைந்து, மகா பிரசாதம் விநியோகிக்கப்படும். மாலையில் ஸ்ரீ கார்த்திகேய சுவாமி லட்சார்ச்சனை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நடக்க உள்ளது.
திங்கட்கிழமை, ஸ்கந்த சஷ்டி தினத்தில், ஸ்ரீ ருத்ரம் ஓதுதல் மட்டுமின்றி, கோவில் வளாகத்திற்குள் காவடி ஊர்வலமும் நடைபெறும். மேலும் ஸ்ரீ கார்த்திகேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாலையில் ஊர்வலம், சூர சம்ஹாரம், தொடர்ந்து மகா பிரசாதம் வழங்கப்படும். ஸ்ரீ கார்த்திகேய திருக்கல்யாணத்துடன் ஸ்கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.
- தில்லியிலிருந்து நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
