/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
தலைநகரில் ஷண்முகானந்தா சங்கீத சபாவின் பவள விழா
/
தலைநகரில் ஷண்முகானந்தா சங்கீத சபாவின் பவள விழா
அக் 18, 2025

தில்லி ஷண்முகானந்தா சங்கீத சபா மற்றும் ஆந்திரா சங்கமும் இணைந்து நடத்திய ஷண்முகானந்தா சங்கீத சபாவின் பவள விழாவில் பரதநாட்டிய கலைஞர் ரமா வைத்தியநாதனுக்கு நாட்டிய ரத்னா விருதை உச்ச நீதிமன்ற நீதிபதி கே வி விஸ்வநாதன் வழங்கினார். முன்னதாக முக்கிய விருந்தினரான விஸ்வநாதன் குத்துவிளக்கு ஏற்றி சபாவின் பவள விழாவை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து ரமா வைத்தியநாதன், தக்ஷிணா வைத்தியநாதன் பாகெல் மற்றும் சந்நிதி வைத்தியநாதன் குழுவின் பரதநாட்டிய நிகழ்ச்சி 'சக்த்யா' வழங்கினார்கள்.
விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வி ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து நாமசங்கீர்த்தன கலைஞர் கலைமாமணி உடையாளூர் டாக்டர் கே கல்யாணராமனுக்கு சபாவின் நாத கலாநிதி விருது வழங்கி கவுரவித்தார். இதைத் தொடர்ந்து உடையாளூர் கல்யாணராமனின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெற்றது.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் கர்நாடக இசை கலைஞர் சஞ்சய் சுப்ரமண்யன் கர்நாடக இசைக் கச்சேரி வழங்கினார். எஸ் வரதராஜன் (வயலின் ), நெய்வேலி பி வெங்கடேஷ் (மிருதங்கம் ) பக்கவாத்தியம் வாசித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஷண்முகானந்தா சங்கீத சபா தலைவர் சி எஸ் வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றினார். சபாவின் கௌரவ செயலாளர் எஸ் கிருஷ்ணஸ்வாமி மற்றும் குழு உறுப்பினர் ஸ்வப்னா சேஷாத்திரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். சபாவின் துணை தலைவர்கள் வி சுப்ரமணியன், லஷ்மி நாராயணன், துணை செயலாளர் எஸ் கணபதி இசை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தில்லியிலிருந்து நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
