செப் 17, 2026

அ நிறம் | அளவு
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான மகாகவி பாரதியார் விழா போட்டிகள் சங்கத்தின் தலைவர் முனைவர் ஜி. சிவபாலமுருகன் மற்றும் பொதுச் செயலாளர் சத்யா அசோகன் தலைமையில் நடைபெற்றது.
போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக சங்கத்தின் இணைச் செயலாளர்கள் இரா. இராஜ்குமார் பாலா, ஜோதி பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் வே. இளஞ்சோழன், ஆ. வெங்கடேசன், என். சாமுண்டீஸ்வரி ஆகியோர் போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.
சுஜாதா ரமணன், மீனா வெங்கி, எம்.ஆர். ராமசுவாமி, நித்யா வெங்கேடஷ், எஸ். சண்முகசுந்தரம், ராம் பிரகாஷ் ஆகியோர் போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்றார்கள்.
போட்டிகளில் தில்லித் தமிழ்க் கல்விக் கழக பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
