/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
குரு ஸ்ரீ ராகவேந்திரா ஆராதனை : இசைக் கச்சேரி
/
குரு ஸ்ரீ ராகவேந்திரா ஆராதனை : இசைக் கச்சேரி
ஆக 12, 2025

புதுடில்லி : குரு ஸ்ரீ ராகவேந்திரா ஆராதனையை முன்னிட்டு, ஆர். கே. புரம், செக்டார் 12ல் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி மடத்தில், ஆக (11) திங்கட்கிழமை, வயலின் இசைக் கலைஞர் ஜி. ராகவேந்திரா பிரசாத்தின் இசைக் கச்சேரி நடைபெற்றது.
பக்க பலமாக, பி. மனோகர் மிருதங்கம் வாசித்தார். இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.
மடத்தின் சார்பில், இசைக் கலைஞர்களை சால்வை அணிவித்து கெளரவித்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் (ஜீவ சமாதி) நுழைந்த நாளை நினைவு கூரும் விதமாக இந்த ஆராதனை கொண்டாடப்படுகிறது.
- நமது செய்தியாளர் எம்.வி. தியாகராஜன், புதுடில்லி.