தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ மகா மிருத்யுஞ்சய ஹோமம்

ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ மகா மிருத்யுஞ்சய ஹோமம்

ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ மகா மிருத்யுஞ்சய ஹோமம்


ஆக 15, 2025

Follow on GoogleFavourite on Google

ஆக 15, 2025


Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: உலக நன்மை வேண்டி, சரோஜினி நகர் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் திருக்கோயிலில், ஸ்ரீ சூர்ய நாராயண சாஸ்திரிகள் தலைமையில், இன்று காலை ஸ்ரீ மகா மிருத்யுஞ்சய ஹோமம் மற்றும் விஷேச பூஜைகள் நடைபெற்றது. இந்த ஹோமம், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் மரண பயம் நீங்கச் செய்யப்படுகிறது.


குறிப்பாக, சிவபெருமானின் அருள் வேண்டி இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தின் மூலம், வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் நீங்கி, அமைதியும், வெற்றியும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. வேத விற்பன்னர்கள் மற்றும் ரித்விக்குகள் பலர் பங்கேற்று ஸ்ரீருத்ரம் மற்றும் மிருத்யுஞ்சய ஜப பாராயணம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நமது செய்தியாளர், எம்.வி.தியாகராஜன், புதுடில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us