/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஆடி கடைசி வெள்ளி; டில்லி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
/
ஆடி கடைசி வெள்ளி; டில்லி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆடி கடைசி வெள்ளி; டில்லி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆடி கடைசி வெள்ளி; டில்லி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆக 16, 2025

புதுடில்லி : ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு, டில்லி க்யாலா ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில், சீதாராம சாஸ்திரிகள் தலைமையில், சுவாசினி பூஜை நடைபெற்றது. சுமங்கலி பெண்கள் இதில் பங்கேற்று பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து, கன்யா பூஜை நடந்தது. மூலவர் அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில்
புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆடி வெள்ளி அன்று சுவாசினி பூஜை செய்வது சிறப்பு. இந்த நாளில் சுமங்கலிப் பெண்களை அழைத்து, அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், புடவை போன்ற மங்களப் பொருட்களைக் கொடுத்து, அம்மனாக பாவித்து பூஜை செய்வது வழக்கம். இது குடும்பத்தில் சுபிட்சத்தையும், மகிழ்ச்சியையும் தரும் என்பது நம்பிக்கை.
- நமது செய்தியாளர்,எம்.வி.தியாகராஜன், புதுடில்லி.