/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
தமிழர் நலக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
/
தமிழர் நலக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
தமிழர் நலக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
தமிழர் நலக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ஆக 16, 2025

புதுடில்லி : டில்லி, மயூர் விஹார்-3, தமிழர் நலக் கழகம், 79ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சியை ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் சிறப்பாக நடத்தியது. தலைவர் கா. சிங்கத்துரை, பொதுச் செயலர், தி. பாஸ்கரன் தேசிய கொடி ஏற்றினார்கள். குழந்தைகள் சுதந்திர தினம் பற்றி பேசியும், பாட்டு பாடியும் மற்றும் தியாகிகள் போல் வேடமிட்டும் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கழகத்தின் உறுப்பிர்கள் பி. பாலசுப்பிரமணியன், கோபாலகிருஷ்ணன், செயலர், ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில், குழந்தைகளுக்கு பேனா பென்சில் வழங்கினர்.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு விழா இனிதே முடிந்தது.
துணைத் தலைவர் பி. கலியபெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் நீலகண்டன், சேக் தாவூத் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்..
- நமது செய்தியாளரர், மீனா வெங்கி.