தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம்

துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம்

துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம்


ஆக 16, 2025

Follow on GoogleFavourite on Google

ஆக 16, 2025


Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி : சுதந்திர தினத்தை முன்னிட்டு, டில்லி துவாரகா செக்டார் 7-ல் அமைந்திருக்கும் ஸ்ரீ ராம் மந்திரில், உலக நன்மை வேண்டி, ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம் நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ ஹனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றன. கோவில் அர்ச்சகர் அனில் மிஸ்ரா இதனை நடத்தி வைத்தார்.

காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, ராம்குமார் மற்றும் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம் (108 முறை ) நடைபெற்றது. ஆன்மிக அன்பர்கள் திரளாக இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர்.

இதையடுத்து, ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், இந்த அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன், புதுடில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us