/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
வடதிருத்தணியில் அருணகிரிநாதருக்கு இசை விழா
/
வடதிருத்தணியில் அருணகிரிநாதருக்கு இசை விழா
ஜூலை 13, 2025

ஆனி மூலத் திருநாளை முன்னிட்டு அருணகிரிநாதப் பெருமானுக்கு வடதிருத்தணியில் இசை விழா கோலாகலமாக நடைபெற்றது. உத்திரப் பிரதேச லாஜபத் நகரில் அமைந்துள்ள அருள்மிகு வடதிருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சாகிபாபாத் சுப்ரமணிய சுவாமி கோவில் அறக்கட்டளையின் சார்பில் முதன்முறையாக அருணகிரியாருக்கு இசை வழிபாடு நடைபெற்றது.
நிகழ்வில், பல்வேறு பகுதியைச் சார்ந்த திருப்புகழ் அன்பர்கள் ஒன்று கூடி பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி இசை வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அருணகிரிநாதர் உடன் உற்சவர் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இறுதியில் அன்னதானத்துடன் விழா நிறைவுற்றது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்