
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, நொய்டா கோவில்களான செக்டர் 22 ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் (நொய்டாவின் பழமையான கோவில்), செக்டர் 62 ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவில்களில் பக்தர்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் அம்மனை போற்றிய இதர ஸ்லோகங்களும் பக்தி பாடல்களையும் வாசித்தனர்/ பாடினர். முன்னதாக சிறப்பு அபிஷேகம் கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, ஜெகதீசன் குருக்கள், மோஹித் மிஸ்ரா செய்தனர். பின்னர் ஸ்ரீ துர்கை அம்மனை சிறப்பாக அலங்கரித்தனர். மகா தீபாராதனை முடிந்தவுடன் மகா பிரசாதம் எல்லோருக்கும் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்