/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி
/
நொய்டா கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி

நொய்டா பிரிவு 62ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் மானசா (குரு டாக்டர் வீணாமூர்த்தியின் சீடர், விஜய் ஸ்ரீ ராஜேஸ்வரி கலா நிகேதன், பெங்களூர்) பரத நசட்டியம் நடந்தது. மானசா அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவர் சிவபெருமானிலிருந்து தீம் தேர்ந்தெடுத்திருந்தார். மேலும் காவ்யா மற்றும் இலக்கியா (குரு கோதை நாராயணன், நிருத்ய அபர்ணா பள்ளி டெல்லியின் சீடர்கள்) ஆகியோரும் ஆடினர். சிவ பிரியா பாலாஜி கர்நாடக வாய் பாட்டு பாடினார். இந்த நிகழ்ச்சி நடராஜ பூஜையுடன் தொடங்கியது.
நாட்டிய கலைஞர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் மரியாதை செலுத்தினர். கோவில் மூத்த உறுப்பினர் ராமசேஷன் வரவேற்றார். கோவில் மூத்த உறுப்பினர் Wg Cdr (ஓய்வு) சந்திரசேகர் நன்றி கூறினார். நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை நான்கு தசாப்தங்களாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் வேதிக் பிரசார் சன்ஸ்தான் ஏற்பாடு செய்திருந்தினர்.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்