/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
கிழக்கு தில்லியில் நவராத்ரி கொலு
/
கிழக்கு தில்லியில் நவராத்ரி கொலு

கிழக்கு தில்லி தாஹிர்பூரிலுள்ள ஸ்ரீ வரத கணேசர் ஆலயத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நவராத்திரி பூஜை கொலு வைத்து விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலை ஸ்ரீ கணேஷ் மந்திர் அஸோஸியேஷன் நிர்வகித்து வருகிறது. ஸ்ரீலலிதா மண்டலி குழுவினர் ஒவ்வொரு வருடமும் 10 நாள் பூஜையாக தினமும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பிற ஸ்லோகங்களுடன் மிகுந்த சிரத்தையுடன் பக்தியுடனும் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட பக்தர்கள் இணைந்து பணியாற்றுவது தென்னிந்திய கலாச்சாரம் பறைசாற்றுவதாக உள்ளது. இந்த வருட கொலுவை மண்டலி சேர்ந்த இந்திரா சூரிய நாராயணன், கார்த்தியாயினி மகேஷ் மற்றும் குழுவினர் ஏற்பாடு செய்தார்கள். பூஜை முடிந்த பின் அனைவருக்கும் பிரசாதம் தினமும் வழங்கப்பட்நது.
ஆலயத்தில் பிரதானமாக ஸ்ரீ வரத கணேசர் வீற்றிருக்கிறார். ஸ்ரீ அகத்தீஸ்வரர், ஸ்ரீ பாலசுப்பிரமணியர், ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன. ஆலயம் சார்பாக சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷ பூஜை மற்றும் மாதாமாதம் பக்தர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்