/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா கோவிலில் நவராத்திரி திருவிழா நிறைவு
/
நொய்டா கோவிலில் நவராத்திரி திருவிழா நிறைவு
அக் 04, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராவணனின் உருவத்தை எரித்ததோடு, இந்த ஆண்டு நவராத்ரி திருவிழா, நொய்டா செக்டர் 62 ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோயிலில் நிறைவடைந்தது. இந்த சந்தர்ப்பத்தில், ஸ்ரேயாஸ் ஹரிஹரன் கர்நாடக இசை (வாய் பாட்டு) நிகழ்ச்சியை வழங்கினார். வயலினில் உமா அருண், மிருதங்கதில் மஹாதேவன் பக்க வாத்தியம் வாசித்தனர். இந்த நிகழ்ச்சியை வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் ஏற்பாடு செய்தனர். ஷ்ரேயாசை கோயில் நிர்வாகத்தினர் கவுரவித்தனர். மஹா பிரசாதம் அனைத்து இசை ஆர்வலர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்