/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா கோயில்களில் நவராத்திரி விழா : ஆயிரம் பேருக்கு அன்னதானம்
/
நொய்டா கோயில்களில் நவராத்திரி விழா : ஆயிரம் பேருக்கு அன்னதானம்
நொய்டா கோயில்களில் நவராத்திரி விழா : ஆயிரம் பேருக்கு அன்னதானம்
நொய்டா கோயில்களில் நவராத்திரி விழா : ஆயிரம் பேருக்கு அன்னதானம்
செப் 23, 2025

நொய்டா: வேத மந்திரங்களுடன் தொடங்கி பத்து நாட்கள் திருவிழா, பல்வேறு கலாச்சார நிகழ்வுகள், தவிர, லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனா, ஸ்ரீ லலிதா ஸ்ரீ சஹஸ்ரநாம மண்டலி பெண்கள் குழு அவர்களின் தேவி மகாத்மியத்தை பாராயணம் செய்வது, செக்டர் 62, நொய்டா, ஸ்ரீ கார்த்திகேயா கோயில் வளாகத்தில் நடை பெற உள்ளது. 'அன்னதானத்தில்' பிரசாதம் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் .
பத்து நாட்கள் திருவிழாவின் சிறப்பம்சம் 'கொலு', இது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் 'கொலு' என்று பிரபலமாக அறியப்படும், இது 5 , 7 அல்லது 9 படிகளில் வைக்கப்பட்டுள்ளது.
செக்டர் 62 வளாகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த 'கொலுவை' தொடர்ந்து வைக்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் அடுத்த தலைமுறையினரும் வந்து நமது தென்னிந்திய பாரம்பரியத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று முறை பரிசும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
மூன்று புது டில்லியின் அமைப்புகள்
சண்முகானந்தா சங்கீத சபா (75 வது ஆண்டு ), ராமகிருஷ்ணபுரம் தென்னிந்திய
சொசைட்டி (60 வது ஆண்டு) மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவ (14வது ஆண்டு) ஆகியவை பல்வேறு நடனம், இசை நிகழ்வுகளை நடத்துவதில் எங்களுடன் கைகோர்த்துள்ளது. டாக்டர் சுஷிலா விஸ்வநாதன் அவர்களின் 'கமலாம்பா நவாவர்ணம்', திருமதி ருக்மணி மற்றும் குழுவினரின் 'கோலாட்டம்', குமாரி காவ்யா, குமாரி எலக்கியாவின் பரதநாட்டியம் நடனம், மற்றும் டாக்டர் பிரசாந்த் கோபிநாத பாய் வழங்கும் கர்நாடக இசை ஆராதனை, கோயில் வளாகத்தில் நடக்க உள்ளது.
கோயில் நிர்வாகம் நொய்டாவின் பல்வேறு செக்டர்களினிருந்தும் மற்றும், இந்திராபுரம், வைஷாலி, காசியாபாத், கிரேட்டர் நொய்டா, குருகிராம் ஆகிய இடங்களில் இருந்து வருவார்கள் ஏராளமான பக்தர்கள் வருவதற்கு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதே போல் செக்டர் 22 ல் இருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலிலும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் மற்றும் துர்கைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன. தீபாராதனை முடிந்தவுடன் பிரசாதம் விநியோகம் செய்தனர் .
ஒத்த எண்ணம் கொண்ட தென்னிந்திய மக்களால் தொடங்கப்பட்ட வேதிக் பிரசார் சன்ஸ்தான் , கடந்த நாற்பது ஆண்டுகளாக பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த சன்ஸ்தான் செக்டர் 22 இல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகா கோயில், ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், செக்டர் 62, நொய்டா, இரண்டு கோவில்களையும் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
நொய்டாவில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்.