/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஸ்ரீ ராம் மந்திரில், ஸ்ரீ பகவன் நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆராதனை

செப் 19, 2025

புதுடில்லி : ஸ்ரீ பகவன் நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆராதனையை முன்னிட்டு, துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
சமாராதனை
நேற்று ( செப்-18) காலை ஸ்ரீ ராமபத்ரன் பாகவதர் உஞ்சவிருத்தி பஜனையுடன் ஆராதனை துவங்கியது. அதைத் தொடர்ந்து, என்.பி. கிருஷ்ணமூர்த்தி, எஸ். ஷைலஜா கலந்து கொண்டு நாமசங்கீர்த்தனம் பாடினர். அடுத்து, ஸ்ரீ சரவண சாஸ்திரிகள் தலைமையில், சமாராதனை, தீர்த்தநாராயண மற்றும் ஷோடசோபசார பூஜைகள் நடைபெற்றன. பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
புண்ணியமும் பலனும்
கலிகாலத்தில் இறைவனின் நாமத்தைச் சொன்னாலே போதும் என்பதை அகிலமெங்கும் பரப்பிய பெருமை ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு உண்டு. திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாளும் இருவரும் சம காலத்தவர்கள். கும்பகோணத்துக்கு அருகே திருவிடைமருதூரை அடுத்து அமைந்திருக்கிறது கோவிந்தபுரம். இங்குதான் போதேந்திரர். அதிஷ்டானம் கொண்டுள்ளார்.
பக்தர்கள் தங்கள் வசதியான நேரங்களில் பகவான் நாமத்தை ஜபித்துக்கொண்டே இருக்கலாம். இதற்கான புண்ணியமும் பலனும் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாதவை.
---புதுடில்லியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.