/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
செந்தமிழ்ப்பேரவை புது நிர்வாகிகள் ( 2024- 2026)
/
செந்தமிழ்ப்பேரவை புது நிர்வாகிகள் ( 2024- 2026)
செப் 30, 2024

தில்லி மயூர் விஹார் பேஸ் 3ல் உள்ள செந்தமிழ்ப்பேரவையின் பதினோராவது ஆண்டு வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மற்றும் 2024-2025 & 2025-2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை மலையாளி அசோசியேஷனில் மாலை 04:00 மணி முதல் நடைபெற்றது.
தலைவர் A மாரி தலைமையிலும் செயலாளர் S சரவணன் முன்னிலையிலும் நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் பொருளாளர் N ரவிக்குமார், 2023 - 2024-ம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு இருப்பு நிலை குறிப்பு பட்டியலை சமர்ப்பித்தார். அவை விவாதத்திற்கு பின் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
துஷாரா நாகராஜன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம்:
தலைவர்: A மாரி; துணை தலைவர்: A M ஆறுமுகம்; செயலாளர்: S சரவணன்; இணை செயலாளர்: R கண்ணன்; பொருளாளர்: K செல்வக்குமார்; துணைப் பொருளாளர்: N ரவிக்குமார்
செயற்குழு உறுப்பினர்கள்: V தங்கராஜா, G அருள்செல்வம், M S வெங்கடாசலபதி, S மோகன்