/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சாலிமார் பாக் ஸ்ரீ மீனாட்சி கோவிலில் ஏகதின ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம லட்சார்சனை
/
சாலிமார் பாக் ஸ்ரீ மீனாட்சி கோவிலில் ஏகதின ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம லட்சார்சனை
சாலிமார் பாக் ஸ்ரீ மீனாட்சி கோவிலில் ஏகதின ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம லட்சார்சனை
சாலிமார் பாக் ஸ்ரீ மீனாட்சி கோவிலில் ஏகதின ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம லட்சார்சனை
ஆக 25, 2025

புதுடில்லி : சாலிமார் பாக்கில் அமைந்துள்ள, ஸ்ரீ மீனாட்சி மந்திரில், ஸ்ரீவித்யா உபாசகர் எஸ்.கே. மூர்த்தி தலைமையில், ஏகதின ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம லட்சார்சனை ( ஆக-24) காலை மிக சிறப்பாக நடைபெற்றது. ஏற்பாடுகளை, கோவில் தலைவர் வி. ஆர். சுவாமிநாதன் செய்திருந்தார்.
ஏகதின ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம லட்சார்சனை' என்பது, ஒரே நாளில் ('ஏகதின') ஆயிரம் பெயர்களைக் கொண்ட ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து, அதை லட்ச முறை ('லட்சார்சனை') செய்வது அல்லது அதைப் பின்பற்றி அம்பாளுக்கு லட்ச முறை அர்ச்சனை செய்வது என்று பொருள்படும். இது ஸ்ரீ லலிதா தேவியின் கருணையைப் பெற செய்யப்படும் ஒரு சக்திவாய்ந்த ஆன்மீகப் பணியாகும், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
----நமது செய்தியாளர், தியாகராஜன், புதுடில்லி. 
பிரம்மாண்ட புராணத்தில் அகஸ்திய முனிவருக்கு ஸ்ரீ ஹயக்ரீவரால் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், தேவி லலிதாம்பிகையின் ஆயிரம் திருநாமங்களைப் போற்றும் ஓர் உன்னத ஸ்தோத்திரமாகும். இந்நூல், சக்திப்ரபா அவர்களால் எழுதப்பட்டு, ஒவ்வொரு நாமத்திற்கும் எளிமையான, ஆழமான விளக்கங்களைத் தமிழில் அளிக்கிறது. அன்னையின் அவதாரம், பண்டாசுர வதம் போன்ற புராணக் கதைகள் சுருக்கமாக விவரிக்கப்பட்டு, தியான ஸ்லோகங்களின் பொருளும் விளக்கப்படுகிறது.
காலை, விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சங்கல்பம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம லட்சார்ச்சனை, ஸ்ரீ லலிதா அஷ்டோத்ர சத நாமாவளி, ஸ்ரீ லலிதா த்ரீஸதி நாமாவளி, மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. எராளமானோர் பங்கேற்று லட்சார்ச்சனை செய்தனர்
நிகழ்ச்சியில், கும்பகோணம் வாத்தியார் ஸ்ரீ சேனாபதி,  ஆஸ்திக சமாஜம் தலைவர் டி. என். சிவராம கிருஷ்ணன் ஆகியோர் பூஜையில் பங்கேற்றனர். இதையடுத்து, தம்பதி, கன்யா, வடு பூஜைகள் நடைபெற்றன.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் அன்னதானத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
---நமது செய்தியாளர் எம்.வி.,தியாகராஜன், புதுடில்லி.
