/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
தென்னிந்திய சமாஜத்தில் ஸ்ரீ ருக்மணி கல்யாணம்
/
தென்னிந்திய சமாஜத்தில் ஸ்ரீ ருக்மணி கல்யாணம்
ஆக 25, 2025

புதுடில்லி : சரோஜினி நகர் தென்னிந்திய சமாஜத்தில் ஸ்ரீ ருக்மணி கல்யாணம் (ஆக-24 )கோலாகலமாக நடந்தேறியது.
தென்னிந்திய சமாஜத்தால் கொண்டாடப்படும் மிக முக்கியமான விழாக்களில் ஸ்ரீ ருக்மணி கல்யாண மஹோத்ஸவமும் ஒன்று. இதனை முன்னிட்டு, ஸ்ரீராம் மண்டபத்தில், டில்லி மணி பாகவதர் குழுவினர் ருக்மணி கல்யாணத்தை மிக சிறப்பாக நடத்தி வைத்தனர். கணேஷ் பிரசாத் சுப்ரமணியம் (வயலின்), நூரணி மகாதேவன் (மிருதங்கம்) , ஆதித்யா (ஹார்மோனியம்) ஆகியோர் பக்க வாத்தியம் வாசித்தனர். அக்ஷய், ரமேஷ், பூஜா, துவாரகா ராமபத்ரன், கிருஷ்ணமூர்த்தி, சிவகுமார் ஆகியோர் குரல் ஆதரவு தந்தனர்.
மதியம் 2.00 மணியளவில் மங்களஹாரத்தி நடைபெற்றது.
தொடர்ந்து, ஆஞ்சநேய உற்சவத்துடன் வைபவம் நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, கல்யாண வைபவத்தை கண்டு களித்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ருக்மணி கல்யாணம் ஏன் ?
விதர்ப தேசத்தின் இளவரசியான ருக்மிணி, கிருஷ்ணரின் பக்தியால் கவரப்பட்டு அவரை மட்டுமே திருமணம் செய்ய விரும்பினாள். ருக்மணியின் சகோதரனான ருக்மி, தனது தங்கை ருக்மணியை சேதி நாட்டின் மன்னன் சிசுபாலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தான்.
இதை அறிந்த கிருஷ்ணர், ருக்மணியை சிசுபாலனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முன் அவளை கவர்ந்து சென்று திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வே ருக்மணி கல்யாணம் எனப்படுகிறது.
---நமது செய்தியாளர் எம்.வி.,தியாகராஜன், புதுடில்லி.
