sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

பதங்களும் பாதங்களும்

/

பதங்களும் பாதங்களும்

பதங்களும் பாதங்களும்

பதங்களும் பாதங்களும்


ஆக 01, 2024

ஆக 01, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தில்லி தமிழ்ச் சங்கத்தில் திரையிசையில் பக்தி இசை என்ற தொடர் நிகழ்ச்சியில் குரு கிருஷ்ணமூர்த்தி குழுவினரின் இசை நிகழ்ச்சி பதங்களும் பாதங்களும் என்ற தலைப்பில் ஹரிகதா பாணியில் நடைபெற்றது. அதில் இயல் இசை நாடகம் என்று எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய நிகழ்வாக தொகுத்திருந்தார்கள். பாரம்பரிய குத்துவிளக்கு ஏற்றி செயலர் முகுந்தனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

ஈசனடி போற்றி என தொடங்கி நாதன் நாமம் நமசிவாயமே, கேட்டதும் கொடுப்பவரே கிருஷ்ணா கிருஷ்ணா என தொடர்ந்தார். பக்த பிரகலாதன் படத்தில் வரும் நாராயண மந்திரம், ஆதிபராசக்தி படத்தில் வரும் மணியே மணியின் ஒளியே எல்லோரையும் முணுமுணுக்க வைத்தது. என்றும் இனிக்கும் 'பழம் நீ அப்பா, கோமாதா எங்கள் குல மாதா ( சரஸ்வதி சபதம்) அருமை. எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும் மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன நாட்டிய அபிநயத்துடன் கண்ணுக்கும் காதிற்கும். இனிமை சேர்த்தது.


கர்நாடக இசை சாயலை விட்டு சமூக பாடல்கள் தொடர்ந்தன. தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கத்து வீட்டு பருவ மச்சான் ( கற்பகம்), பொன் எழில் பூத்தது புது வானில், ( பஞ்சு அருணாசலம்), உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல, முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன், நான் பாடும் பாடல் நலமாக வேண்டும், எல்லோருக்கும் பிடித்த மச்சானைப் பார்த்தீர்களா என மிக அருமையான பாடல்களை தேர்ந்தெடுத்து ஆர்வமுடன் இசை மாலையை அளித்தார். வாழிய செந்தமிழ் பாடி நிறைவு செய்தார்.


பரத நாட்டிய கலைஞர் , ஹரிகதா கலைஞர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைப்பாடகராக நாகராஜன் , கீ போர்டில் ஆதித்யா , தபலாவில் நாயர் இணை சேர்ந்து இசை மாலையை இனிமையான மாலையாக தொகுத்து வழங்கினர்.


தமிழ் சங்க தலைவர் சக்தி பெருமாள் வாழ்த்தி பேசினார். சங்கத்தின் சார்பில் சுந்தரராஜன் தொகுத்து வழங்கினார். கலைஞர்களை தமிழ் சங்க நிர்வாகிகள் கெளரவித்தனர்.


- நமது செய்தியாளர் மீனாவெங்கி







      Dinamalar
      Follow us