
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா செக்டார் 62ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில் 77வது குடியரசு தின விழா நடை பெற்றது. கோவிலை நிர்வாகித்து வரும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தானின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கே ராஜேந்திரன் தேசிய கொடியேற்றினார். கோவில் தலைவர் மற்றும் மூத்த உறுப்பினர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தேசிய கீதம் பாடினார்கள். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 'கோவிலில் தேச பக்தியை' அனைவரிடமும் காண முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தை கோவில் நிர்வாகம் கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
