
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுதில்லி துவாரகாவில் அமைந்துள்ள பால் பவன் சர்வதேச பள்ளியில் வருடாந்திர பொங்கல் விழா மிக விமரிசையாக துவாரகாலயா கொண்டாடியது. இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பொங்கல் பண்டிகை பற்றிய தகவல்கள், பாடல்கள், வயலின் இசை, பரதநாட்டியம் , கோலாட்டம் ,கும்மியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றன.
திருக்குறளை, தமிழ் , ஆங்கிலம் மற்றும் இந்தியில் விளக்கியதும், கல்வி எவ்வளவு அவசியம் என்பது பற்றியும் பனிரெண்டு வயது சிறுமி தனிஷ்கா ஆற்றிய உரை எல்லோராலும் மிகவும் பாராட்டப்பட்டது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாராஜன்