ஆக 15, 2026

நொய்டா கோவில்களில் ஆடி பூரம் விழா
நொய்டாவில் உள்ள இரு கோயில்களிலும் ஆடி பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செக்டர் 22-ல் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில், மற்றும் செக்டர் 62-ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலிலும் இவ்விழா நடைபெற்றது.
இந்தச் சிறப்பு திருநாளை முன்னிட்டு, இரு கோயில்களிலும் ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கும் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மனுக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளையல்கள் பக்தர்களால் சமர்ப்பிக்கப்பட்டன. பின்னர் இந்த வளையல்கள் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளன. சந்தானப் பேறு, குடும்ப நலம், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு இவை, பிரசாதமாக கருதப்படுகிறது .
பூரம் நட்சத்திரம், ஸ்ரீ ஆண்டாள் தேவியின் அவதாரத் திருநாள் குறிக்கும் புனித நாளாகும். இந்நாள் பார்வதி தேவிக்கு வளைகாப்பு நிகழ்வாகவும் அனுசரிக்கப்படுகிறது. தெய்வீக அன்னை பூமிக்கு இறங்கி வந்து அருள், வளம், சந்தானப் பேறு மற்றும் பாதுகாப்பை வழங்கும் புனித நாளாக இது நம்பப்படுகிறது.இதற்கு முன்னதாக கோவில்களில் ஸ்ரீ துர்கை மற்றும் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தை கோவில் வாத்தியார்கள் ஸ்ரீ மணிகண்டன் சர்மா, ஸ்ரீ மோகித் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ ஜெகதீஷ் சிவாச்சாரியார் சிறப்பாக நடத்தி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் பாரம்பரிய முறையை பின்பற்றி நடத்தப்பட்டன. தமிழ்நாட்டின் சிறிய நகரமான ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ ஆண்டாள் தேவியின் திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்நிகழ்ச்சியை மிகுந்த பக்தியுடன் அர்ப்பணிப்புடனும் ஒருங்கிணைத்து, சிறப்பாக நடத்துவதில் பங்கேற்ற ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மண்டலி மற்றும் ஏனைய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் நன்றி தெரிவித்தது. மகா தீபாராதனையுடன் நிறைவடைந்தன. தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
நொய்டாவில் வாழும் ஒத்த எண்ணம் கொண்ட தென்னிந்திய மக்களால் தொடங்கப்பட்ட வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், நாற்பது ஆண்டுகளாக பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறது. அதன் இவ்விரண்டு கோயில்களையும் நிர்வகிக்கிறது: பிரிவு 22 இல் இருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில், மற்றும் பிரிவு 62 இல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோயில், என்பது குறிப்பிடத்தக்கது.
- நொய்டாவில் இருந்த வெங்கடேஷ்
