/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
தில்லி ரமண கேந்திரத்தில் பிரதோஷ வழிபாடு
/
தில்லி ரமண கேந்திரத்தில் பிரதோஷ வழிபாடு
நவ 29, 2024

கார்த்திகை குரு வாரத்தை முன்னிட்டு, தில்லி ரமண கேந்திரத்தில் வியாழக்கிழமை பிரதோஷ பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. குரு வந்தனம், கணேச பூஜை மற்றும் கலச பூஜையுடன் வழிபாடு தொடங்கியது. இதையடுத்து, ஏகவார ருத்ராபிஷேகம், லகுன்யாசம், அதைத் தொடர்ந்து பன்னீர், சந்தனம், பால் உள்பட 11 வித அபிஷேக பொருட்களை கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் நடந்தது.
ஸ்ரீ ருத்ர நமகம் மற்றும் சமகம் பாராயணத்தை தொடர்ந்து, ஸ்ரீ ருத்ரநாம த்ரிஸதி, சிவார்ச்சனை மற்றும் நந்திக்கு அஷ்டோத்திரம் செய்யப்பட்டது. ஷோடசோபசார பூஜைக்கு பிறகு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பிரதோஷம் என்பது பிரதோஷ விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு புனிதமான மற்றும் குறிப்பிடத்தக்க இந்து அனுசரிப்பு ஆகும். இது ஒவ்வொரு சந்திர மாதத்திலும் இரண்டு முறை நிகழும். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் அந்தி நேரங்களில், குறிப்பாக சந்தியா காலத்தின் போது அனுசரிக்கப்படுகிறது. பிரதோஷம் மிகவும் மங்களகரமானதாகவும் மற்றும் ஆசீர்வாதங்களைக் கொண்டுவருவதாகவும், பாவங்கள் மற்றும் தடைகளை நீக்குவதாகவும் நம்பப்படுகிறது.
நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்