/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா கோவிலில் சீதா ஸ்ரீராமர் கல்யாண உற்சவம்
/
நொய்டா கோவிலில் சீதா ஸ்ரீராமர் கல்யாண உற்சவம்
மே 11, 2025

நொய்டா கோவிலில் சீதா ஸ்ரீராமர் கல்யாண உற்சவம் நடைபெற்றது நொய்டா பிரிவு 22, ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவிலில், சீதா ஸ்ரீ ராமர் கல்யாண உற்சவத்தை வி எஸ் எஸ் பஜனை மண்டலி நிகழ்த்தியது. விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. சீதா கல்யாணம், ஆஞ்சநேய உற்சவம், மகா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. பல்வேறு தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் புகைப்படங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் நொய்டாவின் பல்வேறு பிரிவுகளில் இருந்து, இந்திராபுரம், காஜியாபாத், வைஷாலி மற்றும் தில்லி ஆகிய அண்டை பகுதிகளிலிருந்தும் வந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பஜனை சம்பிரதாயப்படி கல்யாணம் நடந்தது. பஜனை பாடல்களை வி விஸ்வநாதன் பாகவதர் மற்றும் குழுவினர் பாடினர். பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் ஏற்பாடு செய்திருந்தது. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மண்டலி - பெண்கள் பிரிவு, நன்கொடையாளர்கள், ஸ்பான்சர்கள், மற்றும் உறுப்பினர்கள்: ராதாகிருஷ்ணன், சுவாமிநாதன், ஸ்ரீதர் ஐயர், சிவராமன், wg cdr (ஓய்வு) சந்திரசேகர், ஜானகி மற்றும் பக்தர்களுக்கும், அவர்களின் அதீத சேவைகளுக்காக கோவில் நிர்வாகம் நன்றி தெரிவித்தது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்