
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா செக்டர் 62, ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோயிலில் வேத மந்திரத்துடன், குரு பெயர்ச்சி தொடங்கியது. கலச பூஜை மற்றும் சங்கல்பத்துடன், ஜபம், ஹோமம் நடை பெற்றது.
அனைத்து பூஜைகளும் சங்கர் சாஸ்திரிகள் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கணபதி, கோயில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா மற்றும் மோஹித் மிஸ்ரா உதவியுடன் நடந்தன. கணபதி சாஸ்திரிகள் குரு பெயர்ச்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார். ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் சிறப்பம்சம் குருவுக்கு சிறப்பு அபிஷேகம், பின்னர் சிறப்பு அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்டது. மகா தீபராதனையுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்