sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

கிழக்கு தில்லி சுப சித்தி விநாயகர் கோவிலில் சோம்நாத் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்

/

கிழக்கு தில்லி சுப சித்தி விநாயகர் கோவிலில் சோம்நாத் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்

கிழக்கு தில்லி சுப சித்தி விநாயகர் கோவிலில் சோம்நாத் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்

கிழக்கு தில்லி சுப சித்தி விநாயகர் கோவிலில் சோம்நாத் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்


ஜூலை 06, 2025

ஜூலை 06, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிழக்கு தில்லி சுப சித்தி விநாயகர் கோவிலில் சோம்நாத் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் பக்தர்கள் தங்கள் கையால் நேரிடையாக செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது .


லிங்கத்தின் வரலாறும் பின்னணியும்:-

குஜராத் மாநிலம் சோமநாதர் ஆலயம் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்கங்களில் ஒன்று என்பது நாம் அறிந்ததே. சுயம்புவான இந்த லிங்கம் மிகுந்த காந்த சக்தி கொண்டு பூமியிலிருந்து சுமார் இரண்டு அடி உயரத்தில் அந்தரத்தில் எழும்பியுள்ள இயற்கை அதிசயம்.இந்த லிங்கம் குடிகொண்டுள்ள சோமநாதர் ஆலயத்தை மொகலார் மன்னர்கள் பலமுறை தங்கள் படையெடுப்பில் அழித்து அங்குள்ள செல்வத்தை சூறையாடி சென்றது வரலாறு.


அப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஆறு முறை இக்கோவில் படையெடுப்பில் சிதைக்கப்பட்டு அதன் பின் ஆண்ட மன்னர்கள் ஒவ்வொரு முறையும் அதை எழுப்பியுள்ளார்கள் முதல் முறையாக வருடம் 725லும் பின்னர் சிந்து மாநில இசுலாமிய அரபு ஆளுனர் ஜூனாயத்தின் கட்டளைப்படி, உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமியப் படைகள், சௌராட்டிர தேசத்தை ஆண்டு கொண்டிருந்த, பிரதிஹர குல மன்னான இரண்டாம் நாகபாதர் காலத்தில் இரண்டாம் முறையாகவும் இடிக்கப்பட்டது.


1025 ல் டிசம்பர் மாதம், கஜினி முகமது சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி, அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றார் சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை உடைத்து, அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள், தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றார்


24.02.1296-இல் குசராத்தை ஆண்ட இராசாகரன் என்ற மன்னர் காலத்தில், அலாவுதீன் கில்சி சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார். பின்னர் காம்பத் ' நாட்டின் இரண்டாம் கர்ண தேவகேலா மன்னரை கொன்று, அவரின் மனைவி கமலாதேவியை மதமாற்றம் செய்து மணந்து கொண்டார். . 1375ல் ஜூனாகாத் சுல்தான், முதலாம் முசாபர் ஷா, உருவ வழிபாட்டினை அவமதிக்கும் பொருட்டு, சோமநாதபுரம் ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினார்.


1451ல் ஜூனாகாத் சுல்தானாக இருந்த முகமது பேக்டா என்பவர் சோமநாதரின் ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார். 1701ல் அவுரங்கசீப் சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் கோவிலை தரைமட்டம் செய்வதும் அதனை அவ்வப்போது இந்திய மன்னர்கள் மறுசீரமைப்பு செய்வதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.


முதல் முறையாக வருடம் 649லும் பின்னர் சௌராட்டிர தேசத்து வல்லபீபுர யாதவகுல மன்னர் சோமநாதபுர ஆலயத்தை அதே இடத்தில் இரண்டாம் முறையாக சீரமைத்து கட்டினார். மூன்றாம் முறையாக 815 ல், கூர்சர பிரதிஹர வம்சத்தின், இரண்டாம் நாக பாதர் மன்னர், சோமநாதபுர ஆலயத்தை மறுபடியும் சீரமைத்து கட்டினார். நான்காம் முறையாக மாளவ நாட்டு போஜராஜனும், பட்டான் நாட்டு சோலங்கி மன்னரும் 1042 -இல் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்கள்.


ஐந்தாம் முறையாக பொ.யு. 1308 -இல் சூதசமா வம்ச அரசன் மகிபாலன் என்பவர் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டினார். அவர் மகன் கேன்கர் என்பவர் 1326_-1351-ஆம் ஆண்டில் கோயிலில் சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். ஆறாம் முறையாக 1783 -இல் இந்தூர் நாட்டு அரசி அகல்யாபாய் ஹோல்கர், நாக்பூர் மன்னர் இராஜா போன்ஸ்லே, கோலாப்பூர் மன்னர் சத்ரபதி போன்ஸ்லே மற்றும் குவாலியர் மன்னர் ஸ்ரீமந் பாடில்புவா ஷிண்டே ஆகியோர் ஒன்று சேர்ந்து, சிதைந்த போன பழைய சோமநாதபுரம் கோயில் அருகே புதிய சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினர்.


ஏழாம் முறையாகவும், இறுதியாகவும், விடுதலை பெற்ற இந்திய அரசின் உள்துறை அமைச்சரும் துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேலும் உணவு அமைச்சராக இருந்த கே. எம். முன்ஷியும் இணைந்து பொது மக்களிடம் நிதி திரட்டி, சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் கட்டத் துவங்கினர். முதலில் பழைய சோமநாதபுரம் கோயில் இடிபாடுகளை அக்டோபர் மாதம்,1950 -இல் அகற்றினர்.


சோமநாதபுரம் கோயிலை இடித்துக் கட்டிய இடத்தில் இருந்த மசூதியை சில மைல் தூரத்திற்கு அப்பால் இடம் மாற்றி அமைத்தனர். சோமநாதபுர கோயிலை மறுநிர்மாணம் செய்ய மே மாதம் 1951ல், இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். இராசேந்திரப் பிரசாத் தலைமையில், புதிய கோயிலுக்கு அஸ்திவாரக்கல் நடப்படும் விழா நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்ட சோமநாதரின் ஆலயம் இந்தியக் குடியரசுத் தலைவர், சங்கர் தயாள் சர்மா தலைமையில் சனவரித் திங்கள் 1ஆம் நாள், 1995ஆம் ஆண்டு (01/-01/1995) பொது மக்களின் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.


பல படையெடுப்புகள் சீரழிவுகள் இவற்றில் சிதைந்த சோமநாதர் லிங்கத்தின் பகுதிகள் பல வருடங்களாக பாதுகாக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தது. உடைந்த சிவலிங்கம் துண்டுகள் சிவலிங்கம் வடிவில் பேணப்பட்டு பூஜையும் வழி வழியாக செய்யப் பட்டு வந்தது. காஞ்சி மகாபெரியவர் கவனத்திற்கு இந்த செய்தி பகிரப்பட்ட போது அயோத்தி ராமர் கோவில் நிர்மானத்திற்கு பிறகு இப்பணியில் தொடரலாம் என்று அறிவுரை சொன்னதாக குறிப்புகள் சொல்கின்றன.


G.K.சீதாராமனிடம் இந்த லிங்கத்தின் சிறு வடிவங்கள் தலை முறையாக பூஜிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. தற்போதைய காஞ்சி பெரியவர் அறிவுரைப்படி சோமநாதர் லிங்கத்தின் பகுதிகள் நாட்டின் பல ஊர்களுக்கும் பக்தர்கள் பார்வைக்கும் பூஜைக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது. மக்கள் இதன் பின்னணியை அறிந்து கொள்ளவும் அதற்குரிய இடத்தில் சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை அறிகிறோம்.


- நமது செய்தியாளர் மீனா வெங்கி







      Dinamalar
      Follow us