தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா முருகன் கோவிலில் சிறப்பு இசை நிகழ்ச்சி

நொய்டா முருகன் கோவிலில் சிறப்பு இசை நிகழ்ச்சி

நொய்டா முருகன் கோவிலில் சிறப்பு இசை நிகழ்ச்சி


செப் 08, 2026

Follow on GoogleFavourite on Google

செப் 08, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா முருகன் கோவிலில் சிறப்பு இசை நிகழ்ச்சி
நொய்டா, செக்டர் 62 ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலின் பிரதிஷ்டை தினத்தின் கடைசி பகுதியாக, “ஓம் சரவண பவ” எனும் தலைப்பில் சிறப்பு கர்நாடக இசை நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இசை நிகழ்ச்சி ஷண்முகானந்தா சங்கீத சபா (எஸ் எஸ் எஸ்), புது டெல்லி மற்றும் வேதிக் பிரசார் சன்ஸ்தான் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. சபாவின் தலைவர் ஸ்ரீ சி எஸ் வைத்தியநாதன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பேராசிரியர் பி.பி. (PB) கண்ண குமார் அவர்கள் வாய்ப்பாட்டு வழங்கினார். அவருக்கு வயலினில் அரவிந்த் நாராயணன், மிருதங்கத்தில் விக்னேஷ் ஜெயராமன், கடத்தில் வருண் ராஜசேகரன், ஆகியோர் பக்கவாத்தியத்தில் வாசித்தனர். இந்த இசை நிகழ்ச்சி செப்டம்பர் 6 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை, செக்டர் 62 கோவில் வளாகத்தில் நடைபெற்றது. பிரதிஷ்டை தினத்தின் ஆன்மிகச் சிறப்புடன், இனிமையான கர்நாடக இசையும் சங்கமிக்கும் இந்நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக, வி பி எஸ் சார்பில், மூத்த தலைவர் ராஜு ஐயர் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்றார். எஸ் எஸ் எஸ் பொது செயலாளர் எஸ் கிருஷ்ணஸ்வாமி கலைஞர்களை அறிமுகப்படுத்தினார். வி பி எஸ் தலைவர் ரவி பி சர்மா, மூத்த உறுப்பினர்கள் எஸ் ராதாகிருஷ்ணன், கோபால் ஐயங்கார், மற்றும் சபாவின் இணை செயலாளர்எஸ் கணபதி கலைஞர்களை கவுரவித்தனர். வி பி எஸ் மூத்த உறுப்பினர் ராஜு ஐயர் எஸ் கணபதியை கவுரவித்தார். இசை நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது .
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us