/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சங்கடஹர கணபதிக்கு சிறப்பு அலங்காரம்
/
சங்கடஹர கணபதிக்கு சிறப்பு அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி குடி கொண்டுள்ள எல்லா கோவில்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள், அலங்காரங்கள் நடைபெற்று வருகின்றன.
தலைநகர் வசுந்தரா என்க்ளேவ் பகுதியில் உள்ள சங்கடஹர கணபதிக்கு காய் கனிகளால் அலங்காரம் செய்விக்கப்பட்டது.
தலைநகரிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள வசுந்தரா பகுதியில் உள்ள முந்தி முதல்வனுக்கு விநாயகர் சதுர்த்தியை யொட்டி கிலோ கணக்கில் காய் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
இதனையடுத்து முற்றிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளும் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளைகொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்த தெய்வத்தை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர், தொடர்ந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது .
சிவன் அபிஷேகப் பிரியன், விஷ்ணு அலங்காரப் பிரியன், நவக்கிரகங்கள் துதிப்பிரியர்கள். விநாயகர் பக்தப்பிரியன். எனவே எந்த தெய்வத்தின் அருளை வேண்டுகிறோமோ, அந்த தெய்வங்களுக்கு பிரியமானவற்றை செய்து வழிபாடு செய்வது சிறப்பு.
உணவு அளித்த கடவுளுக்கு காய்கறிகளால் அலங்கரித்து நன்றி சொல்கிறோம்.அவன் அளித்ததை அவனுக்கு படைத்து மகிழ்ந்து பிரசாதமாக ஏற்றுக் கொள்வது நமது பாக்கியம்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி