/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
தில்லி ரமண கேந்திராவில் சிறப்பு நிகழ்ச்சி
/
தில்லி ரமண கேந்திராவில் சிறப்பு நிகழ்ச்சி
செப் 03, 2024

ரமண மகரிஷி திருவண்ணாமலை ஏகிய நாளான செப்டம்பர் 1 ஆம் தேதிதான் தில்லி ரமண கேந்திரா தொடங்கிய நாள். இந்த மங்கல நாள் வருடாவருடம் பல ஆன்மீக நிகழ்வுகளுடன் தில்லி ரமண கேந்திரா கொண்டாடி வருகிறது.
இந்த வருடமும் ஞாயிறு காலை ஸ்ரீமான் சந்திரசேகர் தலைமையில் சுமார் 30 வேத வித்தகர்கள் 11 முறை ருத்ர ஜபம் ஜபித்து சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.ஸ்ரீராம் சாஸ்திரிகள் முன்னின்று நடத்தி வைத்தார்கள்.
பூஜை முடிவில் பக்தர்கள் ரமண மகரிஷி படத்திற்கு புஷ்பங்கள் சாத்தி வணங்கினர். ஆஸ்ரமம் சார்பில் வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் விதூஷி ஜெயந்தி அய்யர் ஆதித்யா, ரிச்சா ஆகியோர் ரமணர் பாடல்களை பாடினார்கள்.
ரமண மகரிஷியாக வெங்கடரமணன்
தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில்1879 ம் வருடம் டிசம்பர் 30 ம் தேதி. வெங்கட ரமணன்( ரமணர் மகரிஷி ) அவதரித்தார். இவர் சிறு வயதாக இருக்கும் போதே தந்தை காலமாகிவிட்டார்.சித்தப்பா சுப்பையர் வீட்டில் மதுரையில் பள்ளி படிப்பை தொடர்ந்தார். ஓடி விளையாடும் பால பருவத்தில் நான் யார் என்ற கேள்விக்கு பதில் தேடி திருவண்ணாமலை வரை அவரை கொண்டு சென்றது.
வெங்கடரமணன் திருவண்ணாமலையில் பிரவேசித்தது செப்டம்பர் 1 ம் நாள். ரமண மகரிஷிகளின் திருவண்ணாமலை ஏகிய நாளான இந்நாள் மட்டுமல்ல, வரவுள்ள , அடுத்தடுத்த ஒவ்வொரு நாட்களிலும் அவர் காட்டிய பாதையில் அன்பால் மலர்ந்து, அன்பால் நிறைவோம்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி