/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவம்
/
விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி சரோஜினி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி புத்தி சமேத கற்பக விநாயகர் கோவிலில் ஆகஸ்ட் 28 காலை 'விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவம்' மஹன்யாஸ ஏக வார ருத்ர ஜபம் மற்றும் அபிஷேகத்துடன் தொடங்கியது. ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். இதையடுத்து, மாலை 5.00 மணிக்கு சதுர்வேத பாராயணம் நடைபெற்றது. 29 ஆகஸ்ட் முதல், 6 செப்டம்பர் வரை, தினமும் காலை 8.00 மணிக்கு சிறப்பு ஹோமமும் நடைபெற உள்ளது.
சதுர்வேத பாராயணம்
செப்டம்பர் 7-ல் கொண்டாடப்பட உள்ள பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு , சதுர்வேத பாராயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, 6-ம் தேதி வரை தினமும் மாலை சதுர்வேத பாராயணம் நடத்தப்படுகிறது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்