ஜூலை 17, 2026

ஆடி வெள்ளி நொய்டா கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, நொய்டா செக்டர்-62 அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா திருக்கோவிலில், காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, ஸ்ரீ துர்கை அம்மன், சீதம்மா, மற்றும் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் கலந்து கொண்டனர் .
அதேபோல், நொய்டா செக்டர்-22ல் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்புபூஜைகள் நடைபெற்றன. காலை நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்திற்கு பின், ஸ்ரீ துர்கை அம்மனுக்குசிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் ஒன்றுகூடி ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் சௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் பக்தி பரவசத்துடன் பாராயணம் செய்தார்கள்.
மஹா தீபாராதனை முடிந்தவுடன் , பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அனைத்து பூஜைகளும்கோவில் வாத்தியார்கள் : ஸ்ரீ ஜெகதீஷ், ஸ்ரீ மணிகண்டன் மற்றும் ஸ்ரீ மோஹித் மிஸ்ரா,ஆகியோரால் சிறப்பாக நடத்தப்பட்டது.
ஆடி மாதத்தின் ஐந்து மங்களகரமான வெள்ளிக்கிழமைகளிலும், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய தென்னிந்திய திருக்கோவில்களில் நடைபெறுவது போலவே, இத்தகைய சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் தொடர்ந்து இவ்விரு கோவில்களிலும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்
