தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு

நொய்டா கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு

நொய்டா கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு


மே 08, 2026

Follow on GoogleFavourite on Google

மே 08, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

வேத பிரச்சார் சன்ஸ்தான் (vps) நிர்வாகம், நொய்டா, செக்டார் 62, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில், தேவ்ரத் மகேஷ் ராகேவை கௌரவித்தது. டில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர். மேலும், தேவ்ரத்தின் குருவும் (அவரது தந்தையும்) உடனிருந்தார். 'வேத சம்மேளனம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடந்தது.


வேத பாடசாலை ஏற்பாடு செய்யுமாறு வேத பண்டிதர்கள், VPS க்கு வலியுறுத்தப்பட்டது. சனாதன் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் இளைய தலைமுறையினர் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சொற்பொழிவு செய்ய அழைத்த அமைப்பாளர்கள் பாராட்டினார். வேதங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதல்ல. வேதங்கள் மனிதகுலத்தை பாதுகாக்கின்றன, நமது சனாதன தர்மத்தின் செய்தியை இந்த உலகம் முழுவதற்கும் விரிவுபடுத்த வேண்டும்.


முன்னதாக, வி பி எஸ் சார்பில் மூத்த உறுப்பினர் எஸ்.கோபால் அனைத்து பண்டிதர்களையும் வரவேற்றார். வி பி எஸ் ஆஸ்தான வாத்தியார் ஸ்ரீ சங்கர் சாஸ்திரிகள் பண்டிதர்களை அறிமுகப்படுத்தினார். மேலும், மூத்த உறுப்பினர் ஆர்.ராமசேஷன் நிறைவுரை ஆற்றி, நன்றியுரை வழங்கினார். பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us