/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஸ்ரீ தாரா மா ஆஸ்ரமம் நிறுவன தினம்
/
ஸ்ரீ தாரா மா ஆஸ்ரமம் நிறுவன தினம்

ஸ்ரீ தாரா மாதா லோக ரட்சக குரு தெய்வ அவதாரம்.குருவின் தலைமை ஆஸ்ரமம் மும்பை தானாவிலும் ( மேற்கு) மற்ற கிளைகள் குரு கிராம், பூனே, சென்னை, ஹரித்வார், டல்லாஸ் நகரிலும் செயல்பட்டு வருகிறது.
மேற்படி ஆஸ்ரமத்தில் சீரடி சாய்பாபா ஸ்தாபனம் செய்யப்பட்டு தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.சென்னை மும்பை ஹரித்வார், மற்றும் குரு கிராமில் பள்ளிகளும் அமைந்துள்ளன.
மார்ச் 25 ம் தேதி குரு கிராம் ஆஸ்ரமத்தில் நிறுவன தினம் நான்கு நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. முதல் மூன்று நாட்கள் மகாருத்ர ஜபம் ஆராதனைகள் நான்காம் நாள் மகளிர் பங்கேற்ற லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் குருவின் ஆசீர்வாத சொற்பொழிவு தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பெருமளவு கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி